பானின் விலை அதிகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது


அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய வெதுப்பக உணவுகளின் விலைகளை அதிகரிக்க எடுத்த தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அரசாங்கத்தின் உறுதியான விலையை விட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 8.20 ரூபா அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், அதற்கு ஈடாக நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பாண் உட்பட வெதுப்பாக உணவுகளின் விலைகளை அதிகரிக்க வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டது சட்டவிரோதமானது எனவும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபை நேற்று உறுதியளித்துள்ளது.

இதன் காரணமாக பாண் உட்பட வெதுப்பக உணவுகளின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது எனவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.Powered by Blogger.