இன்று மதியம் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கிறார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன், 15 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையும் பதவியேற்கிறது. இந்த அமைச்சரவையில் 2 தமிழர்கள் உள்ளடங்குகிறார்கள்.
டக்ளஸ் தேவானந்தாவிற்கு வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு, இந்து கலாச்சார அமைச்சு வழங்கப்படவுள்ளது.
அமைச்சரவையில் பங்கேற்பதில்லையென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார் என நேற்று முன்தினம் செய்திகள் வந்த நிலையில் இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
ஆறுமுகன் தொண்டமானிற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சு வழங்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனிற்கு எந்த ஒரு அமைச்சுப் பதவியும் வழங்கப்படுவதற்கான செய்திகள் வெளிவரா விட்டாலும் பிரதி அமைச்சு பதவி வழங்கலாம் என அரசியல் வட்டாராத்தில் எதிர்பார்க்கப் படுகிறது...
கிழக்கு, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இடம்பெறுவது சந்தேகமென தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக்கட்சி தரப்பிற்கு 3 அமைச்சு வழங்கப்படவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை உத்தியோகபூர்வமாக தனது பதவிவிலகல் கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஒப்படைக்கவுள்ளார் என்பது நேற்றைய தினம் வெளிவந்த தகவல்..