ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கான போட்டி நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ள நிலையில், அதுவரையான காலப்பகுதிக்கு இடைக்கால அரசாங்கம் நாளையதினம் ஏற்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் ஆசனங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் அமரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவர் பதவியை எதிர்பார்க்கும் நிலையில் அதனை சஜித்திற்கு வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி வேட்புரிமை பெற்றுக்கொடுப்பதற்காக போராடிய குழுவினரே அந்த கருத்தை முன் வைத்துள்ளனர்.
அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சிக்கு சென்றாலும் கட்சியின் உள்ளக மோதல் இன்னும் குறையவில்லை என அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.