வியாளேந்திரனின் இருப்பும் கேள்விக்குறியாக்கும் பரிவாரங்களும்


அரசியல் மாற்றம் கிழக்கு தமிழர்களுக்கு விடிவைக் கொடுக்கும் என்று மேடைகளில் முழங்கியவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனும் ஒருவர்.தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து எதையும் சாதிக்க முடியாது மக்களுக்கு சேவையாற்ற முடியாது என்பதற்காக மஹிந்த அணியுடன் இணைந்தவர். கூட்டமைப்பிலிருந்து வெளியேறி மக்களுக்காக களத்திலே நின்று குரல் கொடுத்து வந்த ஒருவர்.

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபாஜ ராஜபக்ஷவின் வெற்றிக்காக பாடுபட்டவர். இவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்று மட்டக்களப்பு மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வழங்கப்படவில்லை. பிரதி அமைச்சுப்பதவியாவது வழங்கப்படவேண்டும். 

வியாளேந்திரனின் எதிர்கால அரசியல் இருப்பை தக்க வைப்பதற்கு சில மாற்றங்களையும் முன் நகர்வுகளையும் அவரும் அவர் சார்ந்தவர்களும் மேற்கொள்ளவேண்டி இருக்கின்றது.


அவருக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கை இழக்கச் செய்யும் சில செயற்பாடுகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. அவரின் ஆதரவாளர்கள் சிலரின் செயற்பாடுகளை சமூக வலைத்தளங்களிலும் சில இணையத்தளங்களும் அடிக்கடி சுட்டிக்காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.


சமூக வலைத்தளங்களில் எழுதப்படுகின்ற விடயங்களை தட்டிக்கழித்து கோபத்தில் யாரோ எழுதுகிறார்கள் என்பதை தவிர்த்து அதன் உன்மைத் தன்மைகளை ஆராய்ந்து செயற்படவேண்டும். வியாளேந்திரனின் பக்கம் அடிக்கின்ற அலையை சாதகமாகவோ பாதகமாகவோ பயன்படுத்துவது அவர்களின் தூர நோக்கான செயற்பாடுகளிலேயே உள்ளது. 

இவ்வாறான விடயங்களை தவிர்த்து செயற்படவேண்டியது வியாளேந்திரனதும், அவரது ஆதரவாளர்களது இன்றியமையாததாகும்.


Powered by Blogger.