நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஜனாதிபதியினால் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் மேற்படி நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.