தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறத் தயாராகும் இளைஞர் அணியும் அதன் பின்னணியும்






ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வாகரைப்பிதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் உட்பட அவருடன் இணைந்த சிலரும் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் பிள்ளையானின் கட்சியுடனும் இணைந்துகொண்டனர். 





இவர் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் உப செயலாளர் என்பதுடன் யோகேஸ்வரனின் தீவிர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (யோகேஸ்வரன் பிள்ளையானுடன் இணைய பேச்சுக்கள் நடப்பதாக நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தோம் )





தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவிர செயற்பாட்டாளர்களாக உள்ள பல இளைஞர்கள் கட்சியைவிட்டு வெளியேறி வேறு கட்சியொன்றில் இணைவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்பது இளைஞர்களின் நீண்டநாள் குற்றச்சாட்டு.





நடைபெறவுள்ள தேர்தல்களில் இளைஞர்களுக்கு இடம் வழங்கப்படாது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், கட்சியின் உயர்பீடங்களுக்குமே இடம் வழங்கப்படவுள்ளதனால் கட்சியில் விரக்தியுற்ற பல இளைஞர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.











பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பலர் கட்சிதாவ தீர்மானித்திருப்பதானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி என்பதனால் கட்சிக்காகப் பாடுபட்டோம் ஆனால் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லையே என்று இளைஞர் அணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.  பொறுக்குமளவிற்கு பொறுத்துவிட்டோம் இனி எம் வழி தனி வழி எனும் நிலையில் பல இளைஞர்கள்.





விரக்தியுற்றுள்ள இளைஞர்களை கட்சியின்பால் இணைத்து செயற்படவேண்டியது கட்சியின் உயர் மட்டங்களின் பொறுப்பு இல்லையேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 10 வருடத்தில் தடம் தெரியாமல் மறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை






கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.