உங்கள் பெயரின் முதல் எழுத்தை சொல்லுங்க.. தலையெழுத்தை நாங்கள் சொல்லுகின்றோம்


நாம் ஒவ்வொருவரும் தமிழில் நம் பெயரை எழுதுவதை போல ஆங்கிலத்திலும் எழுதுவதுண்டு. அதன் படி ஆங்கிலத்தில் நம் பெயரின் முதல் எழுத்தை கொண்டு குணத்தை கணிக்கும் ஒரு வகை ஜோதிடம் உண்டு. அதன் படி உங்கள் பெயர் எந்த எழுத்தில் ஆரமித்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.A

ஆங்கிலத்தின் முதல் எழுத்தான “A” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் எதிலும் அதிகம் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களின் உடல் அம்சம் மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். இவர்கள் எதிலும் உறுதியோடு இருப்பதோடு பிறரை வழிநடத்தும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். இவர்கள் மற்றவர்களின் உதவியை பெரிதும் எதிர்பாராமல் சொந்தக்காலில் நிற்க முயற்சிப்பர்.B

ஆங்கிலத்தின் இரண்டாவது எழுத்தான “B” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் தன் மீது மற்றவர்கள் செலுத்தும் அன்பிற்கு அதிக மதிப்பளிப்பர். அதோடு பிறர் மீதும் இவர்கள் அதிகம் அன்பு செலுத்துவர். இவர்கள் தைரிய சாலியாக இருந்தாலும் கூட அன்பு மிகுதியாக இருக்கும் காரணத்தினால் பல நேரங்களில் உணர்ச்சிவசப்படுவர்.C

ஆங்கிலத்தின் மூன்றாம் எழுத்தான “C” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் ஒரு மிக சிறந்த பேச்சாளராய இருக்க வாய்ப்புகள் அதிகம். வாயை வைத்து பிழைத்துக்கொள்ளும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். இவர்கள் பல துறைகளில் உள்ள பல விடயங்களை அறிந்து வைத்திருப்பர். இவர்களின் குறை பற்றி கூறவேண்டுமானால் இவர்கள் அதிகம் செலவு செய்வார்கள்.D

ஆங்கிலத்தின் நான்காம் எழுத்தான “D” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்களிடம் ஆளுமை தன்மை அதிகம் இருக்கும். வணிகம் செய்வதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள். நம்பிக்கை மிக்கவர்களாகவும் பிறருக்கு எப்போதும் உதவும் குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் இவர்கள் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களாக இருப்பார்கள்.E

ஆங்கிலத்தின் ஐந்தாம் எழுத்தான “E” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நண்பர்களை எளிதில் பெறும் குணம் கொண்ட இவர்கள் பிறரிடம் தொடர்பு கொள்வதில் சிறந்தவர்களாக இருப்பர்.F

ஆங்கிலத்தின் ஆறாம் எழுத்தான “F” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் தன்னை சுற்றி உள்ளவர்களை முடிந்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். திட்டமிடுவதில் சிறந்தவர்களாக விளங்கும் இவர்கள் பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவர்.G

ஆங்கிலத்தின் ஏழாம் எழுத்தான “G” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் வலராற்றில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு மற்றவர்கள் இவர்களின் விடயத்தில் மூக்கை நுழைப்பதை இவர்கள் எப்போதும் விரும்புவதில்லை. பயணத்தில் ஆர்வம் மிக்க இவர்கள் தங்கல் மதத்தின் மீதும் அதிகம் பற்றுள்ளவர்களாக இருப்பார்கள்.H

ஆங்கிலத்தின் எட்டாம் எழுத்தான “H” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் பிறரை ஊக்குவிப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் சற்று நேரம் பேசினால் போதும் நமக்கு ஒரு தெம்பு வந்துவிடும் என்று கூறுவது போல இருக்கும் இவர்களின் பேச்சு. அதோடு இவர்களிடம் மற்றவர்களை சிறப்பாக கட்டுப்படுத்தும் தன்மை இருக்கும்.I

ஆங்கிலத்தின் ஒன்பதாம் எழுத்தான “I” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் அழகு சம்மந்தமான வேலைகளை மிக சிறப்பாக செய்வார்கள். பியூட்டி பார்லர், ஃபேஷன் டிசைன் போன்றவற்றில் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். இவர்கள் அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.J

ஆங்கிலத்தின் பத்தாம் எழுத்தான “J” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் எதிலும் விடாமுயற்சியோடு செயல்படுவர். ஒன்றை அடையவேண்டும் என்று நினைத்தால் அதற்காக பல முயற்சிகளை எடுக்கும் குணம் கொண்டவர்கள் இவர்கள். தன் வாழ்க்கைத்துணையை பெரும்பாலும் இவர்களே தேர்ந்தெடுப்பர்.K

ஆங்கிலத்தின் பதினோராம் எழுத்தான “K” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் வாழ்வில் அர்த்தமுள்ள செயல்களை செய்ய எண்ணுவார்கள். எதையும் பேச வெட்கப்படும் இவர்கள் தனக்கு பிடித்தவர்களை மிகவும் அன்போடு கவனித்துக்கொள்வர். உடல் ரீதியாக இவர்கள் நல்ல திடமானவர்களாக இருந்தாலும் மனதளவில் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.L

ஆங்கிலத்தின் பனிரெண்டாம் எழுத்தான “L” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் தன் அன்பை சரியான நபரிடம் வெளிப்படுத்துவதில் தயக்கம் கொள்வர். இதனால் அன்பு சம்பந்தமான விடயத்தில் சில நேரங்களில் பிரச்சனைகள் வரலாம்.வாழ்வில் எப்படியாவது உயரவேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இருக்கும்.M

ஆங்கிலத்தின் பதிமூன்றாம் எழுத்தான “M” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் மற்றவர்களுக்கு சிறப்பாக அறிவுரைகள் வழங்குவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மிக சிறந்த நண்பர்கள் கிடைப்பார்கள் அதோடு இவர்களின் வாழ்கை துணையும் இவர்களிடம் உண்மையாக இருப்பர்.N

ஆங்கிலத்தின் பதினான்காம் எழுத்தான “N” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் எந்த ஒரு செயலையும் முழுமையாக செய்யவேண்டும் என்று எண்ணுபவர்களாக இருப்பார்கள். எதிலும் துடிப்போடும் விடாமுயற்சியோடும் செயல்படும் எண்ணம் இவர்களிடம் இருக்கும்.O

ஆங்கிலத்தின் பதினைந்தாம் எழுத்தான “O” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் கல்விக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இதனால் எழுத்தாளர், பேராசிரியர், பள்ளி ஆசிரியர் போன்ற பணிகள் இவர்களுக்கு உகந்ததாக இருக்கும். அனைவரிடத்திலும் ஒழுக்கத்தை இவர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.P

ஆங்கிலத்தின் பதினாறாம் எழுத்தான “P” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் படபடவென பேசினாலும் மிகுந்த அறிவுக்கூர்மையோடு செயல்படுவார்கள். இவர்கள் மற்றவர்களிடம் எப்படி பழகவேண்டும் என்பதை நன்கு அறிந்துவைத்திருப்பார்கள்.Q

ஆங்கிலத்தின் பதினேழாம் எழுத்தான “Q” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் இருப்பார்கள். சினிமா துறையில் இவர்கள் சென்றால் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும். அதோடு இவர்கள் பத்திரிகை போன்ற துறையிலும் ஜொலிக்க வாய்ப்புள்ளது.R

ஆங்கிலத்தின் பதினெட்டாம் எழுத்தான “R” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் ஒரு மிக சிறந்த மனிதராக இருப்பார்கள். அன்பையும் கருணையையும் வாரி வழங்குவார்கள். சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட இவர்கள் எதையும் லேசாக எடுத்துக்கொள்வார்கள்.S

ஆங்கிலத்தின் பத்தொன்பதாம் எழுத்தான “S” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் புதிய யுக்தி மூலம் எதிலும் வெற்றி பெறும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு மற்றவர்களின் கவனம் எப்போதும் இவர்களின் மீது இறக்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு சற்று அதிகம் உண்டு.T

ஆங்கிலத்தின் இருபதாம் எழுத்தான “T” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் எதையும் எதிர்கொள்ளும் மனவலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்போடு செயல்படும் ஆற்றல் கொண்ட இவர்கள் வாழ்வில் எளிதில் முன்னேறுவார்கள்.U

ஆங்கிலத்தின் இருவத்தியோறாம் எழுத்தான “U” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் அறிவுப்பூர்வமான விடயங்கள் சம்மந்தமாக ஓவியம் வரைவதிலும், எழுதுவதிலும் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். பத்திரிகை, ஓவியம் மற்றும் எழுத்து சம்மந்தப்பட்ட துறையில் இவர்கள் இருந்தால் எளிதில் முன்னேறுவார்கள்.V

ஆங்கிலத்தின் இருபத்திரெண்டாம் எழுத்தான “V” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு வாழும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவரிடத்திலும் அன்போடு பழகுவதோடு மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.W

ஆங்கிலத்தின் இருபத்திமூன்றாம் எழுத்தான “W” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் ஒரு புரியாத புதிராக இருப்பார்கள். ஆனாலும் அவர்களிடம் அன்பிற்கு பஞ்சம் இருக்காது. அனைவரிடத்திலும் இவர்கள் பாசமாக இருப்பார்கள்.X

ஆங்கிலத்தின் இருபத்திநான்காம் எழுத்தான “X” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் மற்றவர்களிடம் எளிதில் பழகிவிடுவார்கள். இவர்கள் சற்று ஆடம்பரமாக வாழவேண்டும் என்று எப்போதும் எண்ணுவார்கள்.

Y

ஆங்கிலத்தின் இருபத்திஐந்தாம் எழுத்தான “Y” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். இக்கட்டான சமயங்கள் துணிச்சலான முடிவெடுப்பதில் இவர்கள் சிறந்து விளங்குவர்.Z

ஆங்கிலத்தின் இருபத்திஆறாம் எழுத்தான “Z” என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால், அவர்கள் மற்றவர்களை பற்றி எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எங்கு சென்றாலும் இவர்களுக்கென்று ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.


Powered by Blogger.