சிறிநேசனின் இறால் பண்ணையை காப்பாற்ற முகத்துவாரம் வெட்டப்பட்டதா?


மழை காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது கிராமங்களில் உள்ள வெள்ள நீர் வடிந்தோட வெட்டி விடப்படும் மட்டு வாவியும் கடலும் சங்கமிக்கும் கல்லடி முகத்துவாரம் இன்று வெட்டி விடப்பட்டு மட்டு வாவியின் நீர் கடலுக்குள் வடிந்தோடச் செய்யப்பட்டுள்ளது.அதிக மழை வீழ்ச்சியோ, வெள்ளப்பெருக்கோ இல்லாது ஏன் இவ்வாறு வெட்டி விட்டார்கள் என்ற கேள்வி பலரிடம் உண்டு.


அதற்கான பதில் இதோ.


சமூக வலைத்தளங்களில் எழுதப்பட்ட விடயங்களை நாம் ஆராய்ந்தபோது...


 பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களும், மாவட்டத்தின் உயர் அதிகாரியும் இணைந்து இறால் பண்ணை ஒன்றை அமைத்துள்ளனர். அந்த பண்ணை அமைந்துள்ள பகுதி மிகவும் தாழ்வான பகுதி ஓரிருநாள் பெய்த சாதாரண மழைக்கே இறால் பண்ணையில் உள்ள நீர் வடிநதோட ஆரம்பித்துள்ளது.


வடிந்தோடும் நீருடன் இறால்களும் வடிந்தோடியுள்ளது. தமக்கு ஏற்படப்போகும் பாரிய நட்டத்தினை ஈடு செய்யும் நோக்கில் மட்டு வாவியில் உள்ள நீரை கடலுக்குள் வெட்டியுள்ளனர்.


போதிய மழை வீழ்ச்சி இன்றி நீரை கடலுக்குள் வெட்டி விட்டதனால் விவசாயிகள் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கவுள்ளனர்.


பாராளுமன்ற உறுப்பினரும் அரச அதிகாரியும் சுய இலாபத்திற்காக விவசாயிகளின் வயிற்றிலடித்துள்ளனர்.Powered by Blogger.