கல்லடியில் அலிசாஹீர் மௌலானாவின் கட்டவுட்டு அகற்றப்பட்டதற்கு சஜித் பிரேமதாசா கண்டனம்



அண்மையில் மட்டக்களப்பில் சஜித்


பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த அலிசாஹிர் மௌலானாவின் கட் அவுட் அகற்றப்பட்டதற்கு சஜித் பிரேமதாச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அண்மையில் சஜித் மட்டக்களப்பிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருந்தார்.






பிரச்சார கூட்டத்திற்காக அந்த பகுதி என்றும் நாங்கள் உங்களுடன்


அலங்கரிக்கப்பட்டிருந்தது. அத்துடன்


கல்லடி காலத்திற்கு அண்மையில் வீதியின் ஒரு பக்கம் சஜித் பிரேமதாசவின் கட் அவுட்டும், மறுபக்கம் அலிசாஹிர் மௌலானாவின் கட் அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது.




இது சமூக வலைத்தளங்களில் பரவி, தமிழ் இளைஞர்கள் அலிசாஹிர் மௌலானாவின் கட் அவுட்டைஅகற்றும் நிலை ஏற்பட்டது.


பிரச்சார கூட்டம் நடந்த அன்றைய தினம், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சஜித் சந்தித்திருந்தார். பின்னர், கிழக்கு தமிழர் ஒன்றியத்தினரையும் சந்தித்தார். கிழக்கு தமிழர் ஒன்றிய பிரதிநிதிகளிடம் பேசும்போது, அலிசாஹிர் மௌலானாவின் கட் அவுட் அகற்றப்பட்டமை குறித்து சஜித் கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன், அது தன்னையும் அவமதிப்பதை போல அமைந்ததாக தெரிவித்துள்ளார்.




முஸ்லிம் தலைவர்களே தன்னுடன் தற்போது முழுமூச்சாக செயற்படுவதாக தெரிவித்த சஜித், தன்னுடன் நிற்பவர்களை அவமதிப்பது தன்னையும் அவமதிப்பதாகுமென தெரிவித்துள்ளார்.


Powered by Blogger.