கிழக்கில் இரண்டாக உடைந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிள்ளையானுடன் இணைந்தார் - யோகேஸ்வரன்


கிழக்கிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடைந்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்குமிடையில் இருந்துவந்த பனிப்போர் பூதாகரமாக வெடித்துள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யோகேஸ்வரனுக்கு இடம் கொடுப்பதில்லை எனும் நிலைப்பாட்டில் துரைராஜசிங்கம் உள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்குமிடையில் அடிக்கடி சண்டைகள் இடம்பெற்றுவந்த நிலையில் இன்று இருவருக்குமிடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தம்மை சுயமாக செயற்பட துரைராஜசிங்கம் விடுவதில்லை எனவும் முஸ்லிம்களுக்கு சார்பானதாகவே முடிவுகளை எடுப்பதாகவும் யோகேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

துரைராஜசிங்கத்தின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளால் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியாதுள்ளதனால் கட்சியை விட்டு விலகி பிள்ளையானின் கட்சியில் இணையவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாம் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகியதனால் தனது சஜித்துக்கான தனது ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Powered by Blogger.