பரபரப்படையும் நீதிமன்ற வளாகம்! கோட்டா மீதான வழக்கின் தீர்ப்பு இன்று? கலகமடக்கும் பொலிஸார் வளாகத்தில்!



கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை அங்கீகரிக்கக் கூடாது எனக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இரண்டாவது நாளாக இன்று நடைபெறவுள்ளது.




நேற்றுக் காலை இந்த மனுவை மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்திருந்தது.


இதனை அடுத்து, மேலதிக சமர்ப்பணங்களைச் செய்வதற்காக இன்று பிற்பகல் 1.30 மணி வரை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.


நேற்று விசாரணை இடம்பெறும் போது நீதிமன்ற வளாகப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு சிறிலங்கா காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


இன்றுடன் விசாரணைகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதேவேளை தீர்ப்பு பெரும்பாலும் நாளையே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று நீதிமன்றப் பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டால், அங்கு ஏற்படக் கூடிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, கலகம் அடக்கும் காவல்துறையினரை நீதிமன்றப் பகுதியில் அதிகளவில் நிறுத்துவதற்கு காவல்துறை தலைமையகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.


மேன்முறையீட்டு நீதிமன்றப் பகுதியில் முழு அளவில் காவல்துறையினரை நிறுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.



Powered by Blogger.