கிழக்கின் ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகள் என்ற 10 கட்சிகளின் முன்னணி இன்றைய தினம் சனிக்கிழமை (19) மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, முற்போக்குத் தமிழர், மக்கள் முன்னேற்றக்கட்சி, அகில இலங்கை தமிழர் மகாசபை, தமழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி) , ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்), கிழக்கு மீள் எழுச்சிக் கழகம், சிறி ரெலோ ஆகிய 10 கடசகள் இணைந்து இன்றைய தினம் சனிக்கிழமை மட்டக்களப்பில் இந்தக் கூட்டணிணை அமைத்துக் கொண்டனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற ஊடக சநதிபபில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,
இன்று ஒரு முககியமான வரலாற்றுப் பதிவொன்றை கிழக்கு மண்ணில் பதிவு செய்திருக்கிறோம். அதாவது, கிழக்கின் ஒனறிணைந்த தமிழ்க் கட்சிகள் ஊடக சந்திபபில் உங்களைச் சந்திக்கிறோம்.
உண்மையில் கிழக்குத் தமிழர் களுடைய நலன் சார்ந்து கிழக்குத் தமிழர்களுடைய இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படைய நோக்கத்திலும், தார்மீகச் சிந்தனையிலும் நாங்கள், இன்று கிழக்கில் 10 கட்சிகள் ஒன்றிணைந்திருப்பதனை ஒரு வரவேற்கத்தக்க விடயமாகக் பார்க்கிறோம்.
இந்த அடிப்படையில் இன்று உங்களுக்குத் தெரியுமு; வருகின்றன நவம்பர் மாதம் 16ஆம் திகதி இந்த நாட்டினுடைய புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் நாங்கள் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக பல கூட்டங்களை நடத்தி பல கலந்துரையாடல்கள் ஊடாக பல தீர்மானங்களை முன்னெடுத்திருந்தோம்.
குறிபபாக கிழக்கிலிருககின்ற தமிழ் மக்களுடைய பிரச்சினைகள், தெவைப்பாடுகள் போன்ற விடயங்களையும் கருத்தில் கொண்டு அடுத்து, இலங்கைத் தீவில் இருக்கின்ற தமிழ் மக்களுடைய நலனையும் அவர்களுடைய பிரச்சினைகள், தேவைகளையும் கருத்தில் கொண்டு இன்று நாங்கள் ஒன்றிணைந்திருக்கின்றோம். இந்த ஒன்றிணைவென்பது ஆரோக்கியமானதாகவும:, எங்களுடைய மக்களின் இருப்பு சார்ந்த விடயங்களில அதிக அக்கறை கொண்டு செயற்படுவதாகவும அமைந்திருககின்றது. அந்த அடிப்படையில், அனைத்துக் கட்சிகளும் இந்த ஊடக சந்திப்பின் ஊடாக முக்கியமாக சில விடயங்களை வெளிப்படுத்த விரும்புகிறோம்.
கிழககு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழர்களுடைய இருப்பு என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டு செல்கின்றது. இந்த நாடு சுதந்திரமடைந்து 7 தசாப்தம் தாண்டிய காலகட்டததில் கிழக்கில் 58 சத வீதத்துக் மேல் இருந்த தமிழர்களின் சத வீதம், 38.5 சதவீதத்திற்கு வந்திருககின்றது. பல்வேறு பட்ட காரணங்களினால், திட்டமிட்ட செயற்பாடுகளினால், தொடர் தேர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்கணின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டு செல்கின்றது. இந்த நிலையில் கிழக்குத் தமிழ்ர்களின் இருப்பைப்பாதுகாக்க வெண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவர் மீதும், சுமத்தப்பட்டிருக்கின்ற பாரிய கடமையாக இருக்கின்றது.
அந்த அடிப்படையில் ஒரு இனத்தினுடைய இருப்பைத் தீர்மானிக்கின்ற ஒரு கட்டடத்தைத் தாங்கிநிற்கின்ற நான்கு தூண்கள் போல ஒரு இனத்தின் இருப்பை தீர்மானிக்கின்ற நான்கு முக்கிய விடயங்கள் தமிழர்களைப் பொறுத்தவரையில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. ஒன்று நிலம் இரண்டு ஈ தமிழர்களுடைய பொருளாதாரம், கல்வி, கலை பண்பாட்டம்சங்கள், அத்தோடு மொழி, ஆகிய விடயங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையில் எமது இனம் சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில் எமது இனம் இராஜதந்திர ரீதியில் சிந்தித்து இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற விடயத்தில் நாங்கள் தெளிவடைந்திருக்கின்றோம்.
குறிப்பாகச் சொல்லப்பொனால் எங்களுடைய தமிழ்த்தலைமைகள், குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு த் தலைமைகளால் ஒரு சின்ன விடயத்தினைக் கூட கடந்த காலத்தில் சாதித்துக் கொள்ள முடியாமல் இருந்திருக்கிறார்கள், இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகளைக் காட்டமுடியும். அதில் இரண்டுவிடயங்களைக் குறிப்பிட முடியும், வவுனியாவில் ஒரு அரசாங்க அதிபரைக் கூட நியமித்துக் கொள்ள முடியாமல், திணறிய ஒரு கட்சியாக , கல்முனையில் ஒரு கணக்காளரை நியமித்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த முடியாத நிலையில கூட ஐக்கிய தேசியக கட்சி அரசாங்கத்திற்கு வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கியதுடன், பிரதமருக்கெதிரான நம்பிக்கை இல்லாப்பிரேரணைக்கு எதிராக வாக்களித்து எதிர்ககட்சியாக இருந்தும் ஆளும் கட்சியாகச் செயற்பட்டும் கிழக்குத் தமிழ் மக்களுடைய, அல்லது இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயத்தில் ஒரு துளியேனும் சாதித்துக் கொள்ள முடியாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கிழக்கில் தாஙகள் நினைத்தனை நடைமுறைப்படுத்தக் கூடிய, செயற்படுத்தக் கூடிய நிலையில் முஸ்லிம்களுடைய அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். எந்த ஆட்சி வந்தாலும் அவர்கள் இணைந்து சந்தர்ப்பவாத அரசிலை அவர்களுக்குச் சாதகமாகப்பயன்படுத்தி பல விடயங்களைச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்;.
இப்போது ஜனாதிபதித் தேர்தலைக் கூட அனைத்து அமைச்சர்கள், பாராளுமுன்ற உறுப்பிர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தியிருக்கின்ற சஜித் பிரேம தாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்திருக்கின்ற சூழலில் நாங்கள் எங்களுஐடய மக்களது நலன் சார்ந்து பல விடயங்களை ஆராய்ந்து தெளிவடைந்த பின்பு மகிந்த ராஜபக்ச அவர்கள்தலைமையிலான பொதுஜன பெரமுன நிறுத்தியிருக்கின்ற கொததபாஜ ராஜபக்சவுக்கு அதரவு வழங்குவதாகத் தீர்மானித்திருக்கிறோம்.
இந்த ஆதரவு என்பது எங்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக அயராது உழைத்தல், உடனடித் தீர:வுகளாகப பெசுகின்ற காணி விடுவிப்பு, காணாமல்போனோர் பிரச்சினை போன்ற விடயங்கள், எங்கள் கிழக்கு மண்ணினுடைய மீள்கட்டுமான அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் ஆகிய மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது.
இவற்றினை மையப்படுத்தி 10 கடசிகளாகிய நாங்கள் இணைந்து கோத்தபாய ராபக்சவுக்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவதாகத் தீர்மானித்திருக்கின்றோம்.