2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் 13.08.2019 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற இருக்கின்றது. இதில் கலந்துகொள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் வருகைதரவுள்ளார்.
இதனை மூடி மறைத்துவிட்டு மக்களை விழிப்பூட்டவும் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் சுமந்திரன் அவர்கள் எதிர்வரும் 12 ம் திகதி களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்திற்கு வருகை தருவதாக விளம்பரப்படுத்துகின்றனர்.
அவ்விளம்பரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு கருத்திட்டுள்ள கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் மாவட்ட செயலாளர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) அவர்கள் " இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்வல்ல இது தமிழ் அரசுக் கட்சியின் நிகழ்வு உங்கள் செயலாளரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்" என்றும் "இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்வல்ல தமிழ் அரசுக் கட்சியின் நிகழ்வே.ம.தெ.எ.பற்று தவிசாளர் யோகநாதன் உரை நிகழ்த்தமாட்டார் இது விடயமாக இந்த செய்தியை பிரசுரித்தவர் தமிழ் அரசுக் கட்சி செயலாளருடன் கதைத்து செய்தியை திருத்துமாறு வேண்டுகிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தமிழர்களை விற்று பிழைப்பு நடர்த்தும் "அரசின் கைக்கூலி ஏமாற்று பேர்வழி திரு.சுமந்திரன்" எதிர்வரும் 12.08.2019 காலை 9.00 மணிக்கு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்துக்கு வருகிறாராம் ... (மக்களை அரசியல் விழிப்பூட்ட)
அனைவரும் தமிழின துரோகி சுமந்திரனுக்கு எதிராக அன்றைய தினம் அணிதிரள " பட்டிருப்பு தொகுதி தமிழ் சமூகம்" என்ற அமைப்பு பகிரங்க அழைப்பு விடுத்து உள்ளது !
கல்முனை பிரதேச செயலக கணக்காளர் நியமனம் மற்றும் தரமுயர்வை பண்ணும் வரை கிழக்கு மண்ணுக்கு வர கூடாது... வந்தால் பாரிய அவமானத்தை எதிர் கொள்வார் எனவும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இது இவ்வாறிருக்க அண்மைக்காலமாக கோவிந்தன் கருணாகரன் அவர்களின் கருத்துக்கள் கூட்டமைப்பின் மீதான அதிருப்தியை வெளிக்காட்டுவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.