யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்
இதன் ஒரு பகுதியாக அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதுடன். இந்த பகுதிக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது