இரவுவேளை பறந்த ஆள் இல்லா விமானம்! வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரையோகம்!


தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி - பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோடு, இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்


.

காட்டாஸ்பத்திரி - பேசாலை வான் பரப்பில் நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த ஆள் இல்லாத விமானம் சத்தம் இன்றி பறந்துள்ளநிலையில் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனால் நேற்றிரவு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

 இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை முதல் தலைமன்னார் பகுதியில் முப்படையினரின் சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.