சமூக ஊடகங்களின் ஊடாக போலியான பிரச்சாரம் செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.
எனவே போலியான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளி என நிரூபிக்கப்படும் நபர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய நிலையம் அறிவித்துள்ளது.