மனோ கணேசனின் கிழக்கை ஆளும் கனவு பலிக்குமா?






இன்றைய பரபரப்பான அரசியல்சூழலில் பரபரப்பாகவே தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துவரும் மனோ கணேசன் மஹிந்த பிரதமராக வருவதற்கு முன்னர் தனது அரசியல் நடவடிக்கை தொடர்பில் ஆளமாக திட்டமிட்டு, விரிவுபடுத்தி திட்டமிட்டு வந்ததை அவதானிக்க முடிந்தது.







தனது அரசியல் பணியினை மலையகத்துக்கு அப்பால் வடக்கு கிழக்கிலும் நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்புக்களை ஏற்படுத்தி வந்ததை அவதானித்திருப்பீர்கள்.








குறிப்பாக கிழக்கு மாகாணசபையில் தனது கட்சி போட்டியிடுவதற்கான சில முன் ஏற்பாடுகளை செய்து வந்தார். அண்மைக் காலத்தில் கிழக்கு மாகாணத்தின் மீது அவரது பார்வை அதிகரித்திருந்தது. அடிக்கடி மட்டக்களப்பு நோக்கி வருகைதந்ததுடன் அபிவிருத்தி சார்ந்த விடயங்ககளிலும் அக்கறை செலுத்தினார்.





அத்துடன் நின்றுவிடாது தனது அரசியலை கிழக்கில் நிலை நிறுத்தவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டார்.








முன்னாள் பிரதி அமைச்சரும் இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான கணேசமூர்த்தியின் மகன் கோபிநாத் அவர்களுடன் நெருக்கமான தொடர்பினை வைத்திருந்ததுடன் கோபினாத் அவர்கள் மனோ கணேசனின் கட்சியில் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பேசப்பட்டது. அதற்கான முன்னேற்பாடுகளும் ஆதரவு தேடும் மயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.





அதேபோல் மனோ கணேசன் அவர்கள் வியாளேந்திரனவர்களுடனும் அபிவிருத்தி தொடர்பில் பல தொடர்புகளை பேணிவந்தவர். 





மனோ கணேசனின் மட்டக்களப்பு மீதான திடீர் அக்கறையும், சமூக வலைத்தள வீரப் பேச்சுக்களும். ஒருசில இளைஞர்களை அவர் பக்கம் இழுத்திருந்தாலும் அது இன்றைய நிலையில் பூச்சியமே.





இந்த அரசியல் குழப்பங்கள் தீர்வுக்கு வந்தபின் இடம்பெறுகின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மனோ கணேசனின் கட்சி போட்டியிட்டாலும் கட்சி வெற்றிபெற வாய்ப்பில்லை. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தான் துருப்பு சீட்டாக பயன்படுத்த நினைத்த வியாளேந்திரன் இன்று மஹிந்த பக்கம் என்பதனால். 


Powered by Blogger.