எதிர்வரும் பொதுத்தேர்தலில் வேட்பாளர் தொகை தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம் இதோ
நாடாளுமன்ற தேர்தலில் மாவட்டரீதியாக தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, மற்றும் வேட்புமனுவில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டிய வேட்பாளர்களின்எண்ணிக்கை ஆகியவை உள்ளடங்கிய வர்த்தமானி அறிப்பை தேர்தல்கள் ஆணையாளர்நாயகம் எம்.ஏ.பீ.சி.பெரேரா வெளியிட்டுள்ளார்.
இந்த வர்த்தமானியின்படி அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 19 எம்.பிக்கள் தெரிவாகுவர். குறைந்த பட்சமாக, திருகோணமலை மாவட்டத்தில் 4 எம்.பிக்கள் தெரிவாகுவர்.
யாழ் மாவட்டத்தில் 7 எம்.பிக்கள் தெரிவாகவுள்ளனர். அதேநேரம் வேட்புமனுவில் 10 வேட்பாளர்களின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 எம்.பிக்கள் தேர்வாகுவர். 9 பேர் வேட்புமனுவில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 எம்.பிக்கள் தெரிவாகுவர். 8 பேர் வேட்புமனுவில் உள்ளடக்கப்பட வேண்டும்.
திகாமடுல்ல(அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் 7 எம்.பிக்கள் தெரிவாகுவர். வேட்புமனுவில் 10 பேர் இணைக்கப்பட வேண்டும்.
நுவரெலியா, புத்தளம், பதுளை மாவட்டங்களில் இருந்து 8 எம்.பிக்கள் தெரிவாகுவர். 11 வேட்பாளர்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
கேகாலை 9 எம்.பிக்கள், 12 வேட்பாளர்கள். இரத்தினபுரி 11 எம்.பிக்கள், 14 வேட்பாளர்கள். மொனறாகலை 6 எம்.பிக்கள், 9 வேட்பாளர்கள். பொலன்னறுவ 5 எம்.பிக்கள், 8 வேட்பாளர்கள். அநுராதபுரம் 9 எம்.பிக்கள், 12 வேட்பாளர்கள். குருநாகல் 15 எம்.பிக்கள், 18 வேட்பாளர்கள். கொழும்பு 19 எம்.பிக்கள், 22 வேட்பாளர்கள். கம்பஹா 18 எம்.பிக்கள், 21 வேட்பாளர்கள். களுத்துறை 10எம்.பிக்கள், 13 வேட்பாளர்கள். மஹநுவர 12 எம்.பிக்கள், 15 வேட்பாளர்கள். காலி 10 எம்.பிக்கள், 13 வேட்பாளர்கள். மாத்தறை 7 எம்.பிக்கள், 10 வேட்பாளர்கள். அம்பாந்தோட்டை 7 எம்.பிக்கள், 10 வேட்பாளர்கள்.