ஆசையாய் சேர்த்த பணத்தை வெள்ள நிவாரணத்திற்கு வழங்கிய பிஞ்சு குழந்தை - மட்டக்களப்பில் மனதை உருக்கிய சம்பவம்!!
ஆசையாய் சேர்த்த பணத்தை வெள்ள நிவாரணப் பணிக்காக வழங்கிய பிஞ்சு குழந்தையின் உயரிய செயற்பாடு மட்டக்க்களப்பு மக்களின் மனதை உருக்கிய சம்பவமாக பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையினால் மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் சில இடங்களில் வெள்ளநிவாரணத்திற்கு உதவுவதற்கான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சிறுமி தான் தன்னுடைய தேவையொன்றினை தன்னுடைய சேமிப்பின் ஊடாக நிறைவேற்ற திட்டமிட்டு சேமித்த பணத்தை மாநகர முதல்வரிடம் இன்று ஒப்படைத்ததன் ஊடாக அனைவரது மனங்களிலும் இடம்பிடித்துள்ளார்.
இவ்வாறான பண்புடைய அனைவரது மனங்களிலும் இடம் பிடிக்குமளவிற்கு செயற்பட்டுள்ள சிறுமியின் உயரிய பண்பையும், நற்பண்புமிக்க பிள்ளையாக வளர்த்த அவரது பொற்றோரையும் அனைவரும் பாராட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


