துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக வி.ஜெகதீசன் நியமனம்!!

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான வி.ஜெகதீசன் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமநாயக அவர்கள் கடந்த (14.10.2025) முதல் அமுலாகும் வகையில் உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளார்.

இதற்கு முன்னர் அதே அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த (14) தமது புதிய பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார். 

அரச நிர்வாகத்தில் சிறப்பான சேவையைப் புரிந்துள்ள வி. ஜெகதீசன் அவர்கள், முன்னதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், பதில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அவரின் நியமனம், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் துறையின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் துறையின் முன்னேற்றம் மற்றும் சேவைத் திறன் மேம்பாட்டுக்காக அவர் தனது அனுபவத்தையும் திறமையையும் அர்ப்பணிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.





Powered by Blogger.