மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இன்று காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டினை இழந்து கார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்துள்ளதுடன், வாகனத்தில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிட்சையளிக்கப்பட்டுவருவதுடன், களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.