மலேசிய அழகுக்கலை போட்டியில் யாழ் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளியும் ஒரு வெண்கலமுகமாக இரு பதக்கங்கள்!!

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு  5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா  மற்றும் அக்கடமியின் உரிமையாளர் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமுமாக இரண்டு பதக்கங்கள் கிடைத்தன.  கண்டியைச் சேர்ந்த எல். தர்ஸனுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்தன.

இலங்கையைச் சேர்ந்த  7 அழகுக்கலை நிபுணர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இவர்களை நயகரா சலுான் என்ட் அக்டமியின் இயக்குனர் கயல்விழி ஜெயபிரகாஷ் அழைத்துச் சென்றுள்ளார். இதில் 14 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றினார்கள்.







Powered by Blogger.