கடந்த 2024 ஆம் ஆண்டு "புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம் " எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நான்காவது நிகழ்வு காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் திருமதி.றபீகா உவைஸின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் காரிகை கலை இலக்கிய மன்றத்தின் மன்றத்தின் ஸ்தாபக தலைவி ஜாஹிதா ஜலால்தீன் மற்றும் உப அதிபர் உட்பட பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.