என்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நேரில் சென்று பண உதவி வழங்கிய மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனஎன்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மன் லியோன்சனின் வீட்டிற்குச் நேரில் சென்று அவரது சத்திர சிகிச்சைக்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆறு இலட்சம் பண உதவியை வழங்கி வைத்தார்.
அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவெப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் மாணவன் செல்வன் லக்ஷ்மன் லியோன்சன் ஒன்பது ஏ தர சித்திகளைப் பெற்று சாதன. படைத்திருந்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனிடம் சத்திர சிகிட்சைக்கு 40 இலட்சம் தேவைப்படுவதாக கூறியதை செவிமடுத்த அரசாங்க அதிபர் தம்மாலியன்ற உதவியை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக தனக்கு தெரிந்த வெளிநாட்டில் உள்ள நன்கொடையாளரிடம் தெரிவித்திருந்த போது குறித்த நன்கொடையாளருடன் சென்று பண உதவியினை வழங்கியுள்ளார்.
6 லட்சம் பண உதவி செய்த மாவட்ட அரசாங்க அதிபருக்கும், அரசாங்க அதிபருக்கு பணம் கொடுத்து உதவி செய்த பெரியகல்லாறைச் சேர்ந்த கோபி கிறிஷ்ணா நன்கொடையாளருக்கும் பண உதவியைப் பெற்ற குடும்பத்தார் நன்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.