கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தைக்கொண்டான் போட்டியில் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலய மாணவிகள் ஒரு தங்கப் பதக்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்கள் உட்பட நான்கு பதக்கங்களைத் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.
இதன்படி கே.டிலுக்ஷி 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 46 கிலோகிராம் தொடக்கம் 49 கிலோகிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், யூ.லதுஸ்மிக்கா 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 63 கிலோகிராம் தொடக்கம் 67 கிலோகிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், ஜே.சுமித்திரா 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 49 கிலோகிராம் தொடக்கம் 53 கிலோகிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், திவிப்பிரியா 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 49 கிலோகிராம் தொடக்கம் 52 கிலோகிராம் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், கே.லக்சாந் 45 கிலோகிராம் கராத்தேயில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்களைப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.