மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் யூலை மாதத்திற்கான நிர்வாக சபை கூட்டம் 12.07.2025 திகதி மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற குறித்த நிர்வாக சபை கூட்டம் அமைப்பின் தலைவர் "சாமஸ்ரீ தேசமானிய" உ.உதயகாந்த் (JP) தலைமையில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அமைப்பின் உபதலைவர், செயலாளர், பொருளாளர், கணக்காய்வாளர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், இதன் போது அமைப்பினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள விடையங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், விசேடமாக அமைப்பினால் இவ்வருட இறுதிக்குள் மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இரு நாள் சுற்றுலா (மட்டக்களப்பிலிருந்து ஆரம்பித்து - கொழும்பு - ஹிக்கடுவ - கதிர்காமம் - அம்பாரை ஊடாக மீண்டும் மட்டக்களப்பு), நீதியின் நிரல் பாகம் - 2 மற்றும் யாப்பு மறு சீரமைப்பு போன்ற விடையங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு, செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.