மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட ''முள்ளிவாய்க்கால் கஞ்சி" வழங்கும் நிகழ்வு!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாளினை நினைவுகூறும் முகமாக ''முள்ளிவாய்க்கால் கஞ்சியை" நினைவுகூறும் நிகழ்வொன்று 

இன்று (12) திகதி மட்டக்களப்பு  சத்துரகொண்டான் நினைவுத்தூபி முன்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் சத்துரகொண்டான் நினைவுத்தூபி முன்பாக ''முள்ளிவாய்க்கால் கஞ்சி" காய்ச்சப்பட்டு வீதியால் சென்ற மக்களுக்கு வழங்கப்பட்டது. 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஶ்ரீநாத் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரினால் நினைவுத்தூபியில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு இறந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி, வீதியால் பயணித்த மக்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது. 

இதன் போது நிகழ்வை சிவில் உடையில் படமெடுத்த பொலில் அதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் படமெடுப்பதை நிறுத்துமாறு உரத்த தொனியில் கேட்டபோது பொலிஸ் அதிகாரி குறித்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்.








Powered by Blogger.