சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பொருட்களை விநியோகித்தல் மற்றும் மீளக்கையேற்றல் தொடர்பான செயலமர்வு!!
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பொருட்களை விநியோகித்தல் மற்றும் மீளக்கையேற்றல் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பொருட்களை விநியோகித்தல் மற்றும் மீளக்கையேற்றல் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் உள்ளிட்ட பொருட்களை விநியோகித்தல் மற்றும் மீளக்கையேற்றல் தொடர்பான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.
மேலும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கடமைக்காக இம்முறை 457 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கப்படவுள்ளதுடன் அவற்றுள் 144 வாக்களிப்பு நிலையங்கள் வாக்கென்னும் நிலையங்களாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.