கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்ணான்டாவினால் பாப்பரசர் பிரான்சிஸ்ஸிற்கு அஞ்சலி!!
கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்ணான்டாவினால் பாப்பரசர் பிரான்சிஸ்ஸிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்ணான்டோ அவர்கள் கொழும்பில் அமைந்துள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவையொட்டி தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்ததோடு அதிதிகளின் பதிவேட்டில் குறிப்பையும் பதிவிட்டார்.