பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த மண்டூருக்கான பேரூந்து சேவை இன்றைய தினம் 01.02.2025 இல் மண்டூர்த் துறையடி ஆலயத்திற்கு அண்மையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
மண்டூர் மக்களின் கோரிக்கையானது கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பிரமுகர்கள் மூலமாக முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, களுவாஞ்சிக்குடி இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர் கோகுலவேந்தன் மற்றும் பிராந்திய முகாமையாளர் விஜிததர்மசேன ஆகியோரிடம் விடுத்த வேண்டுகோளிற்கு அமைய 01.02.2025 இன்று காலை 06.30 மணிக்கு மண்டூர்த் துறையடியில் இருந்து பேரூந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.