தொழிற்சங்க வாதிகளுள் ஒருவரான ஏ. புஹாது அனைத்து முகாமைத்து சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்துடன் இணைவு!!
கிழக்கு இலங்கையின் மூத்த தொழிற்சங்க வாதிகளுள் ஒருவரான ஏ. புஹாது அனைத்து முகாமைத்து சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்துடன் இணைந்துள்ளார்.
கிழக்கிலங்கையின் மூத்த தொழிற்சங்க வாதிகளுள் ஒருவரான இலங்கை அரசாங்கப் பொதுச் சேவைகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான ஏ புஹாது அனைத்து முகாமைத்து சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்துடன் இணைந்துள்ளார்.
தான் சார்ந்த பதவி அணியில் உருவாக்கப்பட்டுள்ள தொழிற்சங்கமாகிய அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தை பலப்படுத்தும் நோக்குடன் இணைந்து கொண்டுள்ள இவர் 1998 ஆம் ஆண்டு முதல் அரச சேவையில் இணைந்து அகில இலங்கை அரசாங்கம் பொது ஊழியர் சங்கத்தின் ஒப்பா தலைவர் ஆகவும் பொருளாளராகவும் பல வருடங்கள் கடமையாற்றிய நிலையில் இலங்கை அரசாங்கப் பொதுச் சேவைகள் சங்கத்தை தாபிப்பதற்காக பாடுபட்டவர் ஆவார்.
இலங்கை அரசாங்கம் பொதுச் சேவைகள் சங்கத்தின் உப தலைவராகவும் பின்னர் தலைவராகவும் அதனை அடுத்து பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய இவர் அப்பதவியை துறந்து தற்போது அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.