நெற் கொள்வனவிற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று சட்டவிரோத தராசுகள் மட்டக்களப்பில் மீட்பு!!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் தற்போது அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில்  நெற் கொள்வனவு செய்யும் வர்த்தகர்களின் அளவை கருவிகள் தொடர்பாக மாவட்ட செயலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய அளவை கருவிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனைக்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட பதில் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பரிசோதகர் வீ.ஜீ.ரீ.ஆர்.நீலவள தலைமையிலாக திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன உப தலைவர் அருளானந்தம்     ரமேஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது நிறுவைக்கு பொருத்தமில்லாத மற்றும் அனுமதியற்ற 3 தராசுகள் சட்ட நடவடிக்கையின் பொருட்டு கைப்பற்றப்பட்டு சீல் பண்ணப்பட்டு, அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

வயல் அறுவடை காலம் ஆகையால் இப்பிரதேசத்தில் சிலர் அனுமதியற்ற நிறுவை தராசுகளை பயன்படுத்தி நெல் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாகவே இந்நடவடிக்கை இன்று மாவட்ட செயலகத்தினால்  முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.