ஐந்து மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார் பிள்ளையான்!!

குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவனேசதுரை சந்திரகாந்தன் ஐந்து மணிநேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக வெளியான சனல் 4 காணொளி குறித்து வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் காலை வாக்குமூலம் வழங்க சென்றுள்ளார்.

இந்நிலையில் சுமார் 5 மணி நேரத்தின் பின்னர் வாக்குமூலம் வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து அவர் வெளியேறியுள்ளார்.



Powered by Blogger.