மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து கணவன் இரண்டு பிள்ளைகளின் தாயின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று 19ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எரிந்து கொண்டிருந்த மனைவியின் தீயை அணைக்கச் சென்றபோது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கணவனுக்கும் சிறு தீக்காயங்கள் ஏற்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணவனால் தீ வைக்கப்பட்ட பெண்ணை அயலவர்கள் உடனடியாக முதலில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.