வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை மேற்க்கொள்ளுங்கள் - உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத்

சீரற்ற காலநிலை தொடர்பான அறிவிப்பு தொடர்பில் உண்மை நிலவரம் என்ன? என்பது தொடர்பில் பலரது கவனமும் ஈர்க்கப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் அதன் நிலவரம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் பின் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

2024 நவம்பர் 23ம் திகதி தொடக்கம் நவம்பர் 28ம் திகதி வரை வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் அனைவரையும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை மேற்க்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.



Powered by Blogger.