நாளைய தினம் இடம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 442 வாக்களிப்பு நிலையங்களிலும் இருந்து வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு வாக்கெண்னும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக மாவட்டத்திலிருந்தும் பிற மாவட்டங்களிலும் இருந்து அதிகளவிலான உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் நாளை மாலை 4.00 மணி முதல் கடமைகளுக்காக சமூகமளிக்க உள்ளதுடன், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் வாக்கெண்னும் நிலையத்திற்காக நியமிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களை சார்ந்த பிரதிநிதிகள் என அதிகளவிலானார் இங்கு ஒன்றுகூடவுள்ள நிலையில் நுளம்பில் இருந்து இவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையின் நிமிர்த்தம் இன்றைய தினம் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இ.உதயகுமார் அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய நுளம்பு கட்டுப்பாட்டு பிரிவினால் கோட்ட முனை பொது சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தலைமையிலான குழுவினர் புகை விசுறுவதன் ஊடாக நுளம்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை இன்று மாலை முன்னெடுத்திருந்தனர்.