காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தற்போதைய நிலை - மட்டக்களப்பில் இருந்து தென்கிழக்காக 600km தூரத்தில் உள்ளது!!

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நேற்றைய தினம் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியானது (Low Pressure Area) இன்று நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Well Marked Low Pressure Area) சற்று வலுவடைந்து தற்போது காணப்படுகின்றது. 

அது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தற்போது நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது. 

அதாவது இது தற்போது அம்பாந்தோட்டையிலிருந்து கிட்டத்தட்ட தென்கிழக்காக 550km தூரத்திலும் 

மட்டக்களப்பில் இருந்து தென்கிழக்காக 600km  தூரத்திலும் 

திருகோணமலையிலிருந்து தென்கிழக்காக 670 km தூரத்திலும்,

யாழ்ப்பாணத்தில் இருந்து தென்கிழக்காக 850 km தூரத்திலும் காணப்படுகின்றது.



Powered by Blogger.