தேசிய மட்ட அகில இலங்கை நடன போட்டி 2024 இல் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவிகள் முதலிடம்!!

தேசிய மட்ட அகில இலங்கை நடன போட்டி 2024 இல் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவிகள் முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அந்த வகையில் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட குரவை நடனத்தில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவிகள் முதலிடத்தினை பெற்றுள்ளனர்.

அத்தோடு உலக்கை நடனத்திலும் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்று மட்டக்களப்பிற்கும் தமது கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் ஆசிரியர் திருமதி. பிரேமநந்தினி விஜயசேகரன் அவர்களின் நெறிப்படுத்தலில் மாணவர்கள் குறித்த சாதனையினை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Powered by Blogger.