மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கான உதவியை இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு - களுவன்கேணியில் சீனத்தூதுவருக்கு கிராம மக்களினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
பட்டாசு கொளுத்தி, தூதுவர் உள்ளிட்ட அவரது பாரியாருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
களுவன்கோணி கிராமத்தில் உள்ள வயோதிபர்கள், அங்கவீனமானோர், ஏழைக் குடும்பங்கள் என்பவற்றில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கான தலா நான்கு ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை சீனத் தூதுவர் வழங்கி வைத்ததுடன், இவர்களுக்காக சீன அரசாங்கத்தின் வாழ்வாதார உதவிக்காக 4 மில்லியன் ரூபா உதவித்தொகையையும் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் - இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் , மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் , மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் , செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.