இதன் போது கல்லடி வேலூர் பால விநாயகர் மற்றும் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபை நிர்வாகிகள், கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், சமுர்த்தி மகளிர் சங்கங்கள், பால விநாயகர் விளையாட்டு கழகம், விபுலானந்த விளையாட்டு கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்களும் இதன் போது கலந்து கொண்டு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றியில் கரம்கோர்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கட்சியின் செயற்பாட்டாளர் எஸ்.சுபராஜ் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (20) ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற போதே மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்போது இளைஞர் அணி தலைவரும் வேட்பாளருமான சண்முகலிங்கம் சுரேஸ்குமார், வேட்பாளர் லியோன் சுஜித் லோறன்ஸ், உள்ளிட்ட எமது கட்சியின் வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.