தேர்தல் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தகவல் அறியும் உரிமை தொடர்பான பயிற்சிப் பட்டறை!!
மட்டக்களப்பில் தேர்தல் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடனான தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை இன்று (25) சத்துருக்கொண்டான் சர்வோதயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் திட்ட முகாமையாளர் ரி. நகுலேஸ்வரன் ஒருங்கணைப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் வளவாளர் கலாவர்ஸ்சினி கனகரெட்ணம் வளவாளராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், இலங்கைத் தேர்தல் செயல்முறைகளில் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை, துல்லியம் மற்றும் உட்சேர்த்தல் ஆகியவற்றை மேம்படுத்தல் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.