மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் அவர்களின் துனைவியார் நந்தினிதேவி சிவம்பாக்கியநாதன் நேற்று (27) திகதி செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்துள்ளார்.
திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
சிவம் பாக்கியநாதன், லேக் ஹவுஸ் பத்திரிகையின் நிருபராகவும், மட்டக்களப்பு விஸ்வகர்மா கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.