மட்டக்களப்பில் இடம்பெற்ற "மாற்றுத் தீர்வுப் பொறிமுறை" மத்தியஸ்த பயிற்சி கருத்தரங்கு

மட்டக்களப்பில் "மாற்றுத் தீர்வுப் பொறிமுறை" மத்தியஸ்த பயிற்சி கருத்தரங்கும் மற்றும் அனுபவ பகிர்வு கலந்துரையாடல்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (15) திகதி இடம் பெற்றது.

மாவட்ட மத்தியஸ்த பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம் ஆசாத்தின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு இடம் பெற்றது. மாற்றுத்தீர்வுப் பெறிமுறை மத்தியஸ்த பயிற்சியின் போது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல் இடம் பெற்றது.

பிணக்குகள் ஏற்படும் போது முரன்பாட்டை தீர்ப்பதற்கும் இணக்கப்படுத்துதற்கு தேவையான  தெளிவூட்டங்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மத்தியஸ்த  சபையின் தவிசாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மத்தியஸ்த  சபையில் இடம் பெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் அனுபவ பகிர்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.










Powered by Blogger.