நாட்டை பாதுகாத்த - வரிசையை இல்லாமல் செய்தவரிடமே நாட்டை கொடுக்கவுள்ளோம் என மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் - ஈரோஸ் பிரபா

நாட்டை பாதுகாத்த - வரிசையை இல்லாமல் செய்தவரிடமே நாட்டை கொடுக்கவுள்ளோம் என மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என ஈரோஸ் கட்சியின் செயலாளர்நாயகம் இரா. பிரபாகரன் தெரிவித்துள்ளார். 

இன்று மட்டக்களப்பு கல்லடியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் தலைவிதியை தீர்மாணிக்கும் நாள் எதிர்வரும் 29 திகதி ஆகும். இத் தேர்தலில் 3 வேட்பாளர்கள் பிரதான வேட்பாளராக களமிறங்கிய இருக்கின்றார்கள். ஆனால் அதில் உள்ள 3 வேட்பாளர்களும் மக்களை நேசிப்பவர்களாக இருந்து வருபவர்கள் என நாம் அறிவோம்.

கோட்டா நாட்டை காப்பாற்ற அழைப்பு விடுத்த போது நாட்டையும், மக்களையும் நேசித்து யாருமே முன்வந்து நாட்டை பெறுப்பேற்காத போது தனி ஒரு மனிதராக ரணில் நாட்டை பெறுப்பெடுத்து 1, 1/2 வருட காலத்தில் நாட்டை மீட்டெடுத்துள்ளார். இவருக்கு இன்னும் 5 வருடங்கள் வழங்கினால் நாட்டின் நிலையை எப்படி மாற்றுவார் என சிந்தித்துப் பாருங்கள்.

இன்று எனக்கு இரவு பகலாக பல கக்கங்களிலும் இருந்து அழைப்புக்கள் சஜித்திற்கு ஆதரவு வழங்குங்கள், JVP க்கு வாக்களியுங்கள் என்கிறார்கள், ஆனால் நாம் சிந்தித்தே செயற்படுவோம்.

நாட்டை பாதுகாத்த - வரிசையை இல்லாமல் செய்தவரிடமே நாட்டை கொடுக்கவுள்ளோம் என மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். இன்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள், மாற்றம் ஒன்றை கொண்டு வர வேண்டு என்று.

மக்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்பவர் ரணில் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள், மக்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் என நினைக்கும் ரணிலுடன் சேர்ந்து  சஜித் ஏன் பிரதமராக சேவையாற்ற முடியாது.

ரணிலுக்கு 5 வருடம் ஜனாதிபதி பதவியை கொடுத்து விட்டு பிரதமராக சஜித் பிரேமதாசா இருந்தால் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவதுடன், அடுத்த 10 வருடங்கள் சஜித் ஜனாதிபதியாக இருக்கலாம் அதற்கு நாம் உதவ முடியும்.

மகிந்தவின் திருடர்கள் ரணிலுடன் சேர்ந்துள்ளதால் வாக்கு குறையும் என்பது பொய். ரணிலுக்கு ஆதரவாக 115  பேர் இருக்கின்றார்கள். ஒருவர் 50000 வாக்கை எடுத்து கொடுக்க முடியாதா?

65 இலட்சம் வாக்கினால் ஜனாதிபதியாக ரணில் விக்கிரம சிங்க அறிவிக்கப்படுவார். இன்று செந்திலைப் போல் பிள்ளையான் கள்ளனாக இருக்கலாம், ஆனால் அவரிடம் வாக்கு வங்கி ஒன்று உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று ஒன்று இல்லை, இலங்கை தமிழரசு கட்சி தற்போது எத்தனையாக உள்ளது. தமிழ் மக்கள் சார்பாக ஒருவரை இறக்க வேண்டும் என யார் சொன்னது? மக்களிடம் கருத்து கேட்டீர்களா? மக்கள் கேட்டார்களா உங்களிடம் தமிழ் வேட்பாளரை போட சொல்லி.

யோக்கர் விளையாட்டு காட்ட வேண்டாம் படித்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றார்கள். அரியநேந்திரன் பாவம், அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நன்கு தெரியும்.

ஈழவர் ஜனநாயக முன்னனி இம்மாதம் 20 திகதியில் இருந்து ரணில் விக்கிரம சிங்கவின் வெற்றிக்காக பிரச்சார பணிகளை ஆரம்பிக்கும்.

இன்று ரணிலை கொண்டு வந்து ஹிஸ்புல்லா பல்கலைக்கழகத்தை திறந்து விட்டு, மறுநாள் ஹிஸ்புல்லா ஹக்கீமுடன் இருந்து சஜித்திற்கு ஆதரவு வழங்கியது போல் ஈரோஸ் இல்லை என்றார்.




Powered by Blogger.