மட்டு - கல்லடி 243வது இராணுவ முகாம் காலாட்படையின் கட்டளைத் தளபதி: காத்தான்குடி இலவச கண் சத்திர சிகிச்சை முகாமினை பார்வையிட்டுள்ளனர்

"சவூதியின் ஒளி" ஜம்யிய்துஷ் ஸபாப் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமினை மட்டக்களப்பு கல்லடி 243வது இராணுவ முகாம் காலாட்படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திமால் குமாரசிங்க இன்று (10)  வெள்ளிக்கிழமை விஜயம் செய்து நோயாளர்களை பார்வையிட்டனர்.

நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான மன்னர் சல்மான் மையத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் பார்வைக் கோளாறுகளை சீர் செய்வதற்கான "சவூதியின் ஒளி" இலவச கண் சத்திர சிகிச்சை முகாம் இலங்கையில் ஜம்யிய்துஷ் ஸபாப் தொண்டு நிருவாகத்தினர் 28வது முறையாக இவ்வருடமும் நடாத்தி வருகின்றது.

சவூதி அரேபியாவின் முழுமையான நிதிப்பங்களிப்பில் இடம்பெறும் இக் கண் சத்திர சிகிச்சை முகமானது இலங்கை சுகாராத அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படுதுடன் நாடளாவிய ரீதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1000 நோயாளர்களுக்கு கண்புரை சத்திர சிகிச்சை வெளிநாட்டு வைத்திய நிபுணர்களால் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.