இந்துக்கல்லூரியின் உள்ளக வீதிகளுக்கான கொங்கிறீட் இடும் பணிகள் ஆரம்பம்!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 10 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்கு உட்பட்ட இந்துக் கல்லூரியின் வளாகத்தில் 155 மீட்டர் நீளமான உள்ளக வீதிகளுக்கான கொங்கிறீட் இடும் பணிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாளப்பிள்ளை பிரசாந்தன் ஆரம்பித்து வைத்திருந்தார்.

மேற்படி பாடசாலையின் வளாகம் ஆனது பருவமழை காலங்களில் நீர் நிரம்பி நிற்பதன் காரணமாக நுளம்பு பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காணப்படுவதுடன் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றமை தொடர்பில் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் கிராமிய வீதிகளில் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு கீழ் இந்து கல்லூரி உள்ளக வீதிகள் செப்பனிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி செயலாளர் (நிருவாகம்) வைரமுத்து பஞ்சலிங்கம், இளைஞரணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார், பிரதேச குழு உறுப்பினரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க பொருளாளருமான மரியநேசம் திவாகர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர், விடுதலைப் புலிகள் கட்சியின் கிராமிய குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.












கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.