மொழித்திறன் ஊடக இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஆறு மாத ஆங்கில பாடநெறியின் பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் "வாழ்க்கை படிநிலை மூன்று" எனும் திட்டத்தின் ஊடாக மூன்றாம் நிலைக் கல்வியான தொழில் கல்வியினை மேம்படுத்த தேவையான ஆங்கில மொழிக் கல்வியினை வழங்கும் திட்டத்தினை சைல்ட் பண்ட் ChildFund நிறுவனத்தின் நிதி அனுசரனையில் புதுக்குடியிருப்பு விவேகாநந்தா தொழில்நுட்ப கல்லூரியுடன் இணைந்து நடாத்திய குறித்த பயிற்சி நெறியின் பரிசளிப்பு நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இளைஞர் யுவதிகளிற்கு ஆங்கில அறிவை பெற்றுக் கொடுக்கும் நேக்கில் 6 மாத கால பயிற்சி நெறியாக மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுகளில் மணிபுரம், விளாவெட்டுவான், பரித்திச்சேனை, மண்டபத்தடி ஆகிய இடங்களில் 153 மாணவர்கள் குறித்த பயிற்சி நெறியை நிறைவு செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு விவேகாநந்தா தொழில்நுட்ப கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் கே. பிரதீஸ்வரன் மற்றும் இளைஞர் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி அனுலா அன்டன் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி கலந்து கொண்டு சிறப்பித்திருந்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதே செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா, ஆக்ஷன் யூனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன், திட்ட பணிப்பாளர் சுதர்சன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அக்ஷன் யூனிட்ரி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், சைல்ட் பண்ட் (Child Fund) நிறுவனத்தின் உயரதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், விவேகாநந்தா தொழில்நுட்ப கல்லூரி உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பாடசாலை கல்வியை நிறைவு செய்து தொழில் முயற்சியில் ஈடுபடவுள்ள இளைஞர் யுவதிகளுக்கான காசோலைகளும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், AuLanka நிறுவனமானது கடந்த 12 வருடங்களுக்கு மேலாக இளைஞர்கள், சிறுவர்களின் நலன் மற்றும் வறிய குடும்பங்களின் தொழில் வாண்மை விருத்தி போன்ற பல்வேறுபட்ட சமூகம்சார் செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.