ஆரையூர் விளையாட்டு கழகத்தின் ஆரையூர் பிறிமியர்லீக் - 2024

மட்டக்களப்பு - ஆரையூர் விளையாட்டு கழகத்தின்   3வது ஆரையூர் பிறிமியர்லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது  உப தலைவர் சண்முகராசா பிரதீப் தலைமையில் ஆரையூர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 29,30,31 ஆந் திகதிகளில் மிக்கக் கோலாகலமாக இடம் பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில்  பிரதம  அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பழமையான விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான ஆரையூர் விளையாட்டு கழகத்தினால் 3வது முறையாகவும் பிரமாண்டமான முறையில் ARY கிரிக்கெட் சுற்றுப்போட்டியை எற்பாடு செய்திருந்தனர்.

ஆரையூர் விளையாட்டுக்கழக வீரர்கள் ஆறு அணிகளாகவும், வீராங்கனைகள் இரண்டு அணிகளாகவும் பிரிந்து பலப்பரீட்சை நடத்தியிர்ருந்தனர். 

மாபெரும் இறுதிப் போட்டியில் ARY DRAGONS அணியினரை எதிர்த்தாடிய ARY KINGS அணி வெற்றியீட்டிதுடன், வீராங்களில் ARY Scorpions வெற்றியீட்டியிருந்தனர். 

இந்நிகழ்வில்  ஶ்ரீகந்தசுவாமி ஆலய குரு. உமாபதசர்மா, ஆரையம்பதி அருள்மிகு ஶ்ரீ கந்தசுவாமி ஶ்ரீகண்ணகி ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயங்களின் பரிபாலன சபையினர், கிழக்கு மகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன், ஆலையம்பதி 3 கிராமசேவை உத்தியோகத்தர், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் போன்றோர் கலந்து சிறப்பித்துருந்ததுடன் வெற்றியீட்டிய அணியினரக்கு பரிசில்களையும் வழங்கி வைத்துள்ளனர்.Powered by Blogger.