மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தினத்தையொட்டியதான நிகழ்வுகள்!!


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின்  வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் வரிசையில் நான்காவது  நிகழ்வாக மகளிருக்கான "பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாமானது"  இன்று (11) திகதி பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  சோதிடரும், பாரம்பரிய சித்த வைத்தியருமான கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய மூலிகை மற்றும் சித்த வைத்தியம் தொடர்பான அறிவூட்டலினையும், சித்த வைத்திய ஆலோசனையினையும் வழங்கியிருந்தார்.

இரு கட்டங்களாக இடம்பெற்ற இந்த வைத்திய முகாமில் காலையில் இடம்பெற்ற நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களும், பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் சமுர்த்தி சமுதாய அடிப்படை சங்கங்களின் உறுப்பினர்களுமாக நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், இந்த வைத்திய முகாம் மூலம் தாம் நல்ல ஆலோசனைகளையும்  பெற்றுக் கொண்டதாக பயனாளிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.









Powered by Blogger.