மட்டக்களப்பில் ரயிலில் மோதி ஒருவர் பலி!!


மட்டக்களப்பில் ரயில் மோதியதில் ஆனொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை கொழும்பில் இருந்து 3.15 மணிக்கு மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட புலதுசி ரயிலில் மட்டக்களப்பு திராய்மடுவை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25.02.2024) இரவு 10.20 மணியளவில் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். 

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருவப்பங்கேணி, சிவ நாகதம்பிரான் வீதியை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டத்தை தொடர்ந்து, சடலத்தை  உறவினர்களின் உதவியுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பொலிசார் அனுப்பிவைத்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கோண்டு வருகின்றனர்.


Powered by Blogger.